PUNJAB MLA

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில்அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவானஜோகிந்தர் பால், தன்னிடம்கேள்விகேட்டஇளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisment

தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில்,பதான்கோட் மாவட்டத்தில் போவா பகுதியில் ஜோகிந்தர் பால், ஒரு சிறிய அளவிலான கூட்டத்திற்கு மத்தியில் உரையாற்றிவருகிறார். அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் எதோ முணுமுணுக்க, அருகில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த இளைஞரை அங்கிருந்து அழைத்து செல்ல முயல்கிறார்.

Advertisment

இருப்பினும் ஹர்ஷ் குமார் என்ற அந்தஇளைஞர், எம்.எல்.ஏவிடம்" உண்மையில் நீங்கள் என்ன செய்தீர்கள்?" என கேள்வியெழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ ஜோகிந்தர் பால்,ஹர்ஷ் குமாரைஅருகில் அழைத்து தான் பேசிக்கொண்டிருந்த மைக்கை அவரது கையில்கொடுக்கிறார்.

மைக்கை ஹர்ஷ் குமார் வாங்கியதும், ஜோகிந்தர் பால் அவரைதாக்க தொடங்குகிறார்.அந்த இளைஞரை அங்கிருந்து முதலில் அப்புறப்படுத்த முயன்ற போலீஸ் அதிகாரியும், ஜோகிந்தர் பாலோடு சேர்ந்து ஹர்ஷ் குமாரைதாக்க, அவர்களோடு கூட்டத்தில் இருந்த சிலரும் சேர்ந்து கொள்கின்றனர்.

இருப்பினும் மற்றொரு காவல்துறை அதிகாரி, அவர்களை தடுத்து இளைஞரை மீட்கிறார். இந்த வீடியோ தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இதற்கிடையே மாநில உள்துறை அமைச்சரும், ஜோகிந்தர் பால் இதுபோல் நடந்து கொண்டிருக்க கூடாது என தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே உட்கட்சி பூசலால்அக்கட்சி தத்தளிக்கும் நிலையில், எம்.எல்.ஏ ஒருவர்,கேள்விகேட்டஇளைஞரை தாக்கியுள்ள சம்பவம்காங்கிரஸுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.