Skip to main content

'30ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர்'-'புதுச்சேரி சபாநாயகர் அறிவிப்பு!

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

Puducherry Assembly session will be held till 30th'-Speaker Selvam announced!

 

புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு மத்திய அரசு காலதாமதமாக அனுமதி அளித்த நிலையில் 2022 - 2023 நிதி ஆண்டுக்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

 

இந்நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும் என புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரவைத் தலைவர் செல்வம், "2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை  முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்திருக்கிறார். இதனை அடுத்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற 30-ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 

மேலும் அவர் கூறும்போது, "நாளை( 23-ஆம் தேதி) கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அதனைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதமும் நடைபெறும். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்வி பதிலும், மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறும் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்