Published on 01/09/2020 | Edited on 01/09/2020
![Prime Minister Narendra Modi pays last respects to PranabMukherjee](http://image.nakkheeran.in/cdn/farfuture/fwm9sEjE0cYSyoskDuHy_hMxz6NsW9D6GWir21jzDi8/1598936886/sites/default/files/inline-images/tfhdg.jpg)
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர், குடியரசு தலைவர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் 13 -ஆவது குடியரசு தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்த பிரணாப் முகர்ஜி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மேலும், சுவாசம் மற்றும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில நாட்களாக ஆழ்ந்த கோமா நிலையில் இருந்துவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். இதனைத்தொடர்ந்து, டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.