kl

பிரதமர் மோடி உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி அன்று காஷ்மீர் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவார். அதேபோன்று இந்த ஆண்டும் அவர் தீபாவளி தினத்தன்று காஷ்மீர் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளியைக் கொண்டாடினார். அதைத் தொடர்ந்து இன்று (05.11.2021) காலை உத்தரகாண்ட் மாநிலம் சென்ற அவர், அங்குள்ள புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து மேலும் சில நிகழ்ச்சிகளில் அங்கு கலந்துகொள்ள இருக்கிறார். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisment