Skip to main content

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
ரகத

 

இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று பொதுமக்களைக் கடந்து அரசியல் தலைவர்களையும் அதிகளவில் தாக்கி வருகிறது. தமிழ்நாடு, டெல்லி, மத்தியப்பிரதேசம், என பல மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித்தும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "வேறு காரணத்துக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, அங்கு எனக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரக் காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்