பிரபல தாதாக்கள் சோட்டா ராஜனுக்கும், முன்னா பஜ்ரங்கிக்கும் உத்தரப்பிரதேச மாநில கான்பூரில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தபால் துறையின் 'எனது அஞ்சல் தலை' (my stamp) திட்டத்தின் மூலம், யார் வேண்டுமானாலும் தங்கள் முகம் பதித்த அஞ்சல் தலையை பெற முடியும். இதற்கு புகைப்படத்தோடு அடையாள அட்டையையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தநிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டத் அஞ்சல் தலைகளில் தாதாக்கள் சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள கான்பூர் தலைமை அஞ்சலக அதிகாரி, தபால் தலைகளில் தாதாக்கள் இடம்பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும். தபால் ஊழியர்கள் புகைப்படங்களை உறுதி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் எனவும், வடிக்கையாளர்களும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.