Skip to main content

கிரண்பேடிக்கு மத்திய அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

 

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட கடந்த 2007ம் ஆண்டில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம்  வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

 

k

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகாரம் யாருக்கு? - கிரண்பேடியும் நாராயணசாமியும் டெல்லியில் முகாம்

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

 

அதிகாரம் யாருக்கு? என்பதில் கிரண்பேடி தொடுத்த மேல்முறையீடு வழக்கு விசாரணை நாளை வரவுள்ள நிலையில் கிரண்பேடியும், நாராயணசாமியும் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

n

 

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் கிரண்பேடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க மறுத்தனர். கடந்த ஜூன் 04-ஆம் தேதி புதுச்சேரி அரசு கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என்றும் அதேசமயம் நிதி சார்ந்த முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

கிரண்பேடி தொடுத்த மேல்முறையீடு வழக்கு விசாரணை நாளை வரவுள்ள நிலையில் இதற்காக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 7 ம் தேதி டெல்லி சென்ற நிலையில் நேற்றிரவு முதல்வர் நாராயணசாமி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் டெல்லியில் முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கிரண்பேடிக்கு ஆதரவாக மத்திய உள்துறை மனு! விடுமுறைக்கு பின்பே விசாரணை என உச்சநீதிமன்றம் திட்டவட்டம்! 

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

 


புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க அதிகாரம் உள்ளது. அவர் அரசு ஆவணங்களை ஆய்வு செய்யலாம் என மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு  உத்தரவு பிறப்பித்தது.   இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

 

k

 

இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் 'புதுச்சேரி ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும்,  மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு மக்களால் தேர்ந்தெடுத்த மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும் என்றும் கருத்து தெரிவித்து கடந்த 30-ஆம் தேதி அதிரடி தீர்ப்பளித்தது. 

 

இந்த தீர்ப்பை எதிர்த்து கிரண்பேடிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

 

உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கினை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்றும்,  நீதிமன்ற விடுமுறைக்கு பின்பு (ஜுலை) வழக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம்,   அதுவரை உயர்நீதிமன்ற தீர்ப்பு படிதான் செயல்பட வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துள்ளது.