debendra nath ray

தூக்கில் தொங்கிய நிலையில் எம்.எல்.ஏ. உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மேற்கு வங்க மாநிலத்தின் ஹேம்தாபாத் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் தேவேந்திரநாத் ரே. நள்ளிரவு ஒரு மணிக்கு யாரோ செல்போனில் அழைத்ததையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. வெளியே சென்ற தேவேந்திரநாத் ரே வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அவரை காணவில்லை என்பதால் தேடியுள்ளனர். அப்போது அருகே உள்ள டீக்கடை ஒன்றில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.

Advertisment

இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது கொலைதான், யாரோ அடித்து கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினரும், பாஜகவினரும் கூறுகின்றனர். மேலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment