ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கரோனா பரவல் காரணமாக தேதி மாற்றம்அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் கரோனாமற்றும் ஒமிக்ரான்பரவல் அதிகரித்துள்ள நிலையில் முன்னதாக போலியோ சொட்டு முகாம் வரும் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போலியோ சொட்டு மருந்துமுகாம் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்றுமாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.