Police throwing smoke on Farmers of Punjab who led the struggle

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த ஆண்டின் தொடக்கத்தின் போது, தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் சென்றபோது, விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்தது. விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் நடத்தப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலே முடிந்தது. இதனையடுத்து, அந்த போராட்டம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கை பேரணியாக செல்லும் போராட்டத்தை முன்னெடுத்து, ஷம்பு எல்லையில் இருந்து அவர்கள் தங்கள் பேரணியை இன்று (06-12-24) தொடங்கினர். அப்போது, விவசாயிகளை இரும்பு வேலிகள், பேரி கார்டுகள் உள்ளிட்டவற்றை வைத்தி ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அதனை மீறியும் விவசாயிகள் போராட முயன்றனர். தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு காரணமாக 6 விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், போராட்டத்தை இன்றைய தினத்திற்கு தற்காலிகமாக கைவிடுவதாக விவசாயி சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.