தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

PM NARENDRA MODI TWEET TAMIL NEWYEAR

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "என் தமிழ்ச் சகோதரர், சகோதரிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிராத்திக்கிறேன், எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

PM NARENDRA MODI TWEET TAMIL NEWYEAR

பிரதமரின் மற்றொரு ட்விட்டர் பதிவில், "கரோனாவை எதிர்த்து ஒன்றாக இணைந்து போராட நாம் அதிக வலிமையைப்பெறுவோம். நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் விழாக்கள் நம்மிடம் சகோதர உணர்வை வலுப்படுத்தட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.