/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-pon_47.jpg)
புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்மகளிர் அணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, ஜேபி நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மகளிர் அணி சார்பில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பிரதமருக்குப் பூங்கொத்து கொடுத்த வானதி சீனிவாசன் அவரது காலில் விழா, அதனைப் பிரதமர் காலில் விழக் கூடாது என்று கண்டித்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)