
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பின்னணி பாடகி பாடகி சங்கீதா சஜித். சிறுநீரக பாதிப்பு தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் அவரது சகோதரியுடன் வசித்து வந்த நிலையில் இன்று காலமானர். இன்று மாலை திருவனந்தபுரத்தில் அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1996 ஆம் ஆண்டு வெளியான 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகி ஹிட் அடித்த 'தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை' என்ற பாடலை சங்கீதா சஜித் பாடியுள்ளார். அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'பிகில்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வெறித்தனம்' பாடலிலும் இன்ட்ரோ போர்ஷனை அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.