Skip to main content

முதலிரவில் மணமகன் எடுத்த விபரீத முயற்சி; இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
A perverse attempt by the bridegroom on the first night at uttar pradesh

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்த பொறியாளரான இளைஞர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, அடுத்த நாளான 4 ஆம் தேதி அன்று அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது.  அப்போது, அந்த இளைஞர் பாலியல் செயல்திறன் அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு தனது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதில், அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து, மணமகளை அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 ஆம் தேதி அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் இந்த சம்பவம் குறித்து, இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அளவுக்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளதாகவும், அவரது அந்தரங்க பகுதியில் ஏற்பட்ட காயங்களில் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அர்ச்சகர் உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்; எழுந்த சர்ச்சை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Controversy arose Police in priest's garb on security duty in U.P

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அர்ச்சகர் உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, ஏராளமான மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அர்ச்சர்கள் உடைகளை அணிந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோவை, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆண் போலீசார் வேட்டி மற்றும் குர்தாவிலும், பெண் போலீசார் சல்வார் குர்தாவிலும் உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவில் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாவது, “காவல்துறை கையேட்டின்' படி காவலர்கள் அர்ச்சகர் போல் வேஷம் அணிவது சரியா? இப்படி உத்தரவு பிறப்பிப்பவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நாளை, இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அப்பாவி பொதுமக்களை யாராவது சூறையாடினால், உ.பி அரசும், நிர்வாகமும் என்ன பதில் சொல்லும்? இந்த முடிவு கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story

மகளையே பாலியல் தொழிலுக்கு தள்ள விரும்பிய கொடூர தாய்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A mother who wanted to push her daughter into incident in uttarpradesh

கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள சாலையில், 10 வயது சிறுமி ஒருவர் தனியாக சுற்றுத்திரிந்து வந்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த சிலர், அந்தச் சிறுமியை அழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, போலீசார் அந்தச் சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு கூறினர். அதன் பேரில், சிறுமிக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்திபிரதேசம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த சிறுமியினுடைய தந்தை இறந்துவிட்டார். அதன் பிறகு, சிறுமியும், அவரது சகோதரரும், தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு, சிறுமியின் தாயார், சிறுமியையும், அவரது சகோதரரையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார்.

அங்கு சிறுமியின் தாயினுடைய ஆண் நண்பர், சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவரது சகோதரரையும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை காரணமாக சிறுமியின் சகோதரர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனிடையே, தனது தாய் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது சிறுமிக்கு தெரியவந்தது. மேலும், அவரது தாயார், சிறுமியையும் பாலியல் தொழிலுக்கு தள்ள கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இந்தக் கொடுமை தாங்காமல் சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் ஆண் நண்பர் ராஜுவையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே தனது மகளை விபச்சாரத்திற்கு தள்ள கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.