கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்பினை பிடித்த நபர் அதற்கு முத்தம் கொடுக்க முற்படுகையில் பாம்பு அவரை கடித்தது.
கர்நாடகா மாநிலத்தில் பொம்மனக்கட்டே பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை தொடர்ந்து பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாம்பு பிடிப்பதற்கு அங்கு வந்த நபர் பாம்பை பிடித்துவிட்டு அதற்கு முத்தம் கொடுக்க முயற்சி செய்தார். பிடிபட்டதால் ஆக்ரோஷமாக இருந்த அந்த பாம்பு முத்தம் கொடுக்க முயன்றவரை கன்னத்தில் கடித்தது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.