அஞ்சலக கணக்கர் தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அஞ்சலக கணக்கர் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடிவதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் அரசியல் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்குக் கண்டனங்கள் எழுந்திருந்தது. மேலும் டி.ஆர்.பாலு, சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு, அஞ்சலக தேர்வு தமிழிலும் இருக்க வேண்டும் என கடிதம் எழுதினர்.
அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிப்.14ஆம் தேதி நடக்கவிருக்கும் அஞ்சலக தேர்வை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுடன் தமிழிலும் எழுதலாம் எனத் தெரிவித்துள்ளார்.