Skip to main content

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்; 4 பேருக்கு போலீஸ் காவல்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Parliamentary Security Breach Incident; Police custody for 4 people

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற மக்களவைக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வண்ண புகை குப்பிகளை வீசியதாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 4 பேரையும் 15 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு அனுமதி கோரியது. மேலும் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்பது நன்கு திட்டமிடப்பட்ட சதி என டெல்லி போலீசார் வாதத்தை முன் வைத்தனர்.

Parliamentary Security Breach Incident; Police custody for 4 people

இதனையடுத்து 4 பேருக்கும் 7 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “நாங்கள் 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க அனுமதி கோரியிருந்தோம். இதனை நீதிமன்றம் பரிசீலித்து, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்; “உண்மை கலங்கலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது” - டெல்லி அமைச்சர்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Delhi Minister spoke about Bail for Kejriwal

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த மே 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். 

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது பாஜகவுக்குத் தெரியும். அவருக்கு உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், இன்னொரு சதித்திட்டத்தை தீட்டி, ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் வரவிருந்த நாளில், அதற்கு ஒரு நாள் முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. அவர் ஏன் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்? ஏனென்றால், அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்து, 10 மடங்கு வேகமாக டெல்லி மக்களுக்காகப் பணியாற்றுவார். இன்றைக்கு பிஜேபிக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றமும் உங்கள் சதி திட்டத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொரு நீதிமன்றமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி வருகிறது. பா.ஜ.க.வுக்கு மற்றொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் ஆணவத்தை முடிவுக்கு கொண்டு வந்து மற்ற கட்சிகளுக்கு எதிராக சதி செய்வதை நிறுத்துங்கள். உண்மை கலங்கலாம் ஆனால் தோற்கடிக்க முடியாது” என்று கூறினார். 

Next Story

கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மனு; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Supreme Court ordered bail to Arvind Kejriwal Petition Against Arrest

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை மட்டுமே இடைக்கால ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக அறிவித்த உச்சநீதிமன்றம், ஜூன் 2 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டதால், ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். 

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘90 நாட்களுக்கு மேலாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் துயரப்பட்டிருக்கிறார். பிணையில் இருந்து ஒருவர் வெளியே வருவதற்கும், அவரிடம் விசாரணையை நடத்துவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தேவைப்படும் போது விசாரணையை நடத்தலாம். பிணையில் இருந்து அவர் வெளியே வந்தால் அவரிடம் விசாரணையை நடத்த முடியாது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தில் முதல்வராக இருக்கிறார். அவருக்கென்று சில உரிமைகள் இருக்கிறது. 90 நாட்களுக்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார். ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கிறார். அவரை கைது செய்துதான் விசாரணை நடத்துவது என்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.