எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் வேளாண் மசோதாக்களை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து அவையில் மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை சூழ்ந்துக் கொண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று பிற்பகல் 01.41 (10 நிமிடங்கள்) வரை மாநிலங்களவையை ஒத்திவைத்தார் மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ்.
இதனிடையே, வேளாண் மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து அவையில் உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.