para military canteens to sell indian brand products

துணை ராணுவத்தினருக்கான கேன்டீன்களில் இனி இந்தியதயாரிப்பு பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

Advertisment

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் 25 முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த தேசமும் முடங்கிப்போயுள்ளது. இந்நிலையில், கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை சரிசெய்யும் வகையிலான நிதியுதவி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அப்போது தற்சார்பு பொருளாதாரம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவை தற்சார்பு பொருளாதார நாடாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து துணை ராணுவத்தினருக்காக செயல்படும் கேன்டீன்களில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே இனி விற்பனை செய்யப்படும் எனஉள்துறை அமைச்சகம்முடிவுசெய்துள்ளது.

இந்த நடவடிக்கையானது ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம்மத்திய ஆயுதப் படையைசேர்ந்த சுமார் 10 லட்சம் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைசேர்ந்த 50 லட்சம் உறுப்பினர்கள் இந்தியத் தயாரிப்புகளைபயன்படுத்துவார்கள் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.