Skip to main content

பஞ்சாப் குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் பாகிஸ்தான்? - பரபரப்பை ஏற்படுத்திய பஞ்சாப் துணை முதல்வர்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

PUNJAB DEPUTY CM

 

பஞ்சாப் மாநிலம் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும் மத்திய உள்துறை அமைச்சகம், இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது.

 

இந்த குண்டுவெடிப்பு குறித்து பேசி பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சன்னி, "சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சில தேசவிரோத சக்திகள் இதுபோன்ற செயல்களை செய்கின்றனர். அரசு விழிப்புடன் உள்ளது. குற்றவாளிகளைத் தப்பவிட மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப்துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, " நம்முடையது எல்லையோர மாநிலம். வெளிநாட்டு சக்திகளின் பங்கு உட்பட எந்த சாத்தியக்கூறையும் நிராகரிக்க முடியாது. மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் உள்ளது. உள்ளது" என்றார்.

 

தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்த சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், "(குண்டுவெடிப்பில் சிக்கியவர்களுக்கு) சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் வெடிகுண்டு வெடித்த சப்தம் கட்டடம் இடிந்து விழுவதைபோல் கேட்டதாக கூறியுள்ளார். நாம் நிலையாக இருப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Petition filed by Senthil Balaji dismissed!

சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையடுத்து செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதே சமயம் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. 

Petition filed by Senthil Balaji dismissed!

இதற்கிடையே அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கக்கோரியும், வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக வழங்கக்கோரியும் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி அல்லி அமர்வில் இன்று (08.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது, வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக வழங்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதோடு கரூர் சிட்டி யூனியன் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

பட்டப்பகலில் சிவசேனா கட்சித் தலைவர் மீது வாளால் தாக்குதல்; பரபரப்பு சம்பவம்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Sword incident on Shiv Sena party leader in broad daylight in punjab

சிவசேனா தலைவரை பட்டப்பகலில் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தாபர். இவர் லூதியானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் போலீசார் ஒருவர் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், அவரை வழமறித்து தாங்கள் கொண்டு வந்த வாளால் தாக்கினர். அவர்களை தடுக்க முயன்ற போலீஸ்காரரை அங்கு வந்த மற்றொருவர் சாலையில் ஓரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். 

இதையடுத்து, அவர்கள் இருவரும் சந்தீப்பை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் சாலையில் மயங்கி கீழே விழுந்தார். அதன் பின்னர், அவர்கள் இருவரும் அந்த இருசக்கர வாகனத்தை எடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சந்தீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அன்று காலை ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தீப் தாபர், சீக்கியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இரண்டு பேர் கொண்டு கும்பல் சந்தீப்பை வாளால் தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. 

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் சிவசேனா கட்சித் தலைவரை வாளால் தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவை சிரோமணி அகாலி தளம் ஹர்சிம்ரத் கவுர் படேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.