/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2951.jpg)
புதுச்சேரி அருகே கரிக்கலாம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்(65). நெல் வியாபாரியான இவர், தவளகுப்பம் பகுதியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அபிஷேகபாக்கம் பகுதியில் அவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. மேலும் அவர் மீதும் தீப்பற்றியதால் வேணுகோபால் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாலையில் ஒருவர் உயிரோடு எரிந்து கொண்டிருந்த சம்பவம் அந்த வழியாக சென்றவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியது. மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தவளகுப்பம் காவல் நிலைய போலீசார், வேணுகோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)