Skip to main content

காணாமல் போன பாதுகாப்பு படை வீரர் - புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்டுகள்!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

MISING PERSONNEL

 

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் (Central Reserve Police Force), ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் (Special Task Force), மாவட்ட சிறப்புப் பாதுகாப்பு படையினர், கமாண்டோ பட்டாலியன் ரெசலூட் ஆக்சன் (Commando Battalion for Resolute Action) ஆகிய பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இணைந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில், கடந்த 03/04/2021 அன்று, அதிரடியாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த வீரர்கள் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஒரு பாதுகாப்பு படைவீரரை காணவில்லை. அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றிருக்கலாம் எனக் கருதப்பட்டது. அந்த வீரரை தேடும் பணியும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் காணாமல் போன வீரரை தாங்கள் சிறைபிடித்திருப்பதாகவும், வீரரை விடுவிக்க மத்தியஸ்தரை அறிவிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகள் பெயரில் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையின் உண்மைத் தன்மை குறித்து ஆராயப்படுவதாக சத்தீஸ்கர் மாநில, மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

 

இந்தநிலையில், தற்போது மாவோயிஸ்டுகள் வெளியிட்டதாக, பாதுகாப்பு படை வீரரின் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் காணாமல் போன இராணுவ வீரர்தான் என சி.ஆர்.பி.எஃப் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி; டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Central govt failed to negotiate with farmers Extreme security in Delhi

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் இன்று (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நேற்று (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் விவசாய சங்கங்களுடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் திட்டமிட்டபடி விவசாயிகள் பேரணியாக சென்று இன்று டெல்லியை முற்றுகையிட முடிவு செய்துள்ளனர். அதன்படி உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இருந்து ஹரியானா வழியாக 2500 விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநில எல்லையில் உள்ள சாலைகளில் இரும்பு ஆணிகள், கான்கீரிட்களை கொண்டு பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லி - ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே பிரம்மாண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமான போலீசார், துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டிரோன்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. போராட்டம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படுவதை தடுக்கவும் சமூக வலைத்தளங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், விவசாயிகளின் டிராக்டர் பேரணியை தடுக்கும் வகையில் ஹரியானாவில் டீசல் விற்பனைக்கும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் டிராக்டர் ஒன்றுக்கு 10 லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக்கூடாது எனவும் ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. 

Next Story

75வது குடியரசு தின விழா; டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
75th Republic Day Celebration; Strong security in Delhi

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் (ஜனவரி 25) மாலை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் குடியரசு தின விழாவானது தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 26 ஆம் நாள் காலை குடியரசுத் தலைவர் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெறும். இதில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வர்.

அந்த வகையில் நாட்டின் 75வது குடியரசு தின விழா (ஜனவரி 26) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 14 கட்டங்களாக வகுக்கப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை, கர்த்தவியா பாதை, விஜய் சவுக், திலக் மார்க் உள்ளிட்ட இடங்களில் சுமார் 14 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

75th Republic Day Celebration; Strong security in Delhi

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு பெண்களை மையமாக வைத்து, இந்திய இசைக்கருவிகளுடன் 100 பெண் கலைஞர் பங்கேற்க உள்ளனர். பிரான்ஸ் அணியினரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 75 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.