Skip to main content

பிரியா வாரியர், இயக்குனர் ஒமர் லுலு மீது மீண்டும் ஒரு புகார்!

Published on 16/02/2018 | Edited on 16/02/2018

இயக்குனர் ஒமர் லுலு இயக்கத்தில் இளம் பட்டாளங்கள் களமிறங்கியிருக்கும் படம் ஒரு அடார் லவ். இந்தப் படத்தி இடம்பெற்றிருக்கும் மாணிக்ய மலராயி பூவி என்ற பாடல் அதிக வரவேற்பையும், சில எதிர்ப்பையும் சந்தித்தது. இந்தப் பாடலில் மலையாள நடிகை பிரியா வாரியர் கண் சிமிட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டன.

 

Priya

 

இதெல்லாம் ஒரு புறமிருக்க, இஸ்லாமியர்களின் உணர்வைப் புண்படுத்துவதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஐதராபாத்தில் இந்தப் படத்தின் இயக்குனர் ஒமர் லுலு மீது புகாரளிக்கப்பட்டு, அது வழக்காக பதியப்பட்டது.

 

இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஜின்சி பகுதியில் உள்ள காவல்நிலையத்தில், இந்தப் படத்தின் இயக்குனர் ஒமர் லுலு மற்றும் நாயகி பிரியா வாரியர் மீது புகாரளித்துள்ளது ஜன்ஜக்ரான் சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகாரளித்துள்ளனர்.

 

‘இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான பாடலை உருவாக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இதற்காக தனிப்பட்ட மத நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியவர்கள் மீது அரசியலமைப்புச் சட்டம் 295ன் கீழ் வழக்குப்பதிய கோரியுள்ளோம்’ என ஜன்ஜக்ரான் சமிதி அமைப்பைச் சேர்ந்தவர் தெரிவித்துள்ளார்.

 

இதுவரை இந்த புகாரை ஏற்று எந்த வழக்கும் பதியவில்லை என ஜின்சி காவல்நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படித்தான் நான் விழுந்தேன்!” - விபத்து காட்சியை வெளியிட்ட வைரல் நடிகை...!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021
popular actress fell down while in shooting

 

 

படப்பிடிப்பு தளத்தில் பிரபல நடிகை நிலை தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப் படத்தில் இடம்பெறும் கண் சிமிட்டும் காட்சி மூலம் பல ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் பிரியா பிராகாஷ் வாரியர். அந்த கண் சிமிட்டும் வீடியோ வெளியான பிறகு பலரும் அதைப் போன்றே முயற்சி செய்து டிக்டாக் பொன்ற வீடியோ வெளியிடும் செயலில் ஈடுபட்டனர். 
 


பின்னர் அவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்து வரும் தெலுங்கு படமான ‘செக்’ படத்தில், அவர் நடிகர் நிதின் முதுகின் மீது ஏற வேண்டிய காட்சியில், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அவருடன் படப்பிடிப்பில் ஈடுபட்டவர்கள் அவரை  தூக்கினர். இந்நிலையில் இந்த விபத்து வீடியோவை நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நிதின், ரகுல்பிரீத் சிங், பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த 'செக்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Next Story

"நான் மட்டும் ஏன் இதைச் செய்தேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்'' - ப்ரியா வாரியர் விளக்கம்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

vsv


'ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியில் கண் சிமிட்டல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்திலிருந்து வெளியேறினார். இவரை இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகைகளுக்கு இணையாக 70 லட்சதிற்கு மேற்பட்டோர் பின்தொடர்ந்து வந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இன்ஸ்டாகிராமிற்குள் வந்த ப்ரியா பிரகாஷ் வாரியர் இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து தான் வெளியேறியதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அதில்...
 


''ஊரடங்கு காலத்தில் அனைவரும் இணையத்திலேயே இருக்கும்போது நான் மட்டும் ஏன் சமூக வலைத்தளத்திலிருந்து விலகினேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதற்குப் பின்னால் பெரிய காரணங்கள் ஒன்றும் இல்லை. என்னை பொறுத்தவரை மற்ற விஷயங்களை விட என் மன அமைதி மட்டுமே எனக்கு முக்கியம். நான் எந்த காரணத்துக்காக செய்தேன் என்பது முக்கியமில்லை. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நான் மன அமைதியுடன் இருந்தேன். ஆனால் இது எனக்கு தொழில்ரீதியான தளம் என்பதால் என்னால் நீண்டநாள் இதிலிருந்து விலகியிருக்கமுடியாது. இரண்டு வாரங்களே விலகியிருந்தாலும் உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். எந்தக் காலத்திலும் சமூக வலைத்தளங்கள் என் மனதைக் காயப்படுத்திவிடக் கூடாது என்று நினைப்பேன்.

ஆனால் சமீபகாலமாக அது என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. எனவே ஒரு சிறிய இடைவேளை எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் இதற்குப் பலரும் பல காரணங்களைக் கூறிவந்ததைப் பார்க்கமுடிந்தது. இதை ஏன் ஒரு பெரிய பிரச்சனையாக மாற்றுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் கேலி செய்யப்படுவது ஒன்றும் புதிதல்ல. தினமும் என்னைப் பற்றிய ஏதாவது ஒரு கேலியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனவே இன்ஸ்டாவிலிருந்து விலகியதற்கு அது காரணமல்ல. மீண்டும் இன்ஸ்டாவிலிருந்து விலகமாட்டேன் என்று சொல்லமுடியாது. தேவைப்பட்டால் மீண்டும் நிச்சயமாக விலகுவேன்'' என விளக்கம் அளித்துள்ளார்.