The old woman who was alone at home was brutalized; Police net for cable operator

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெரித்து நகைகளைக்கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கேபிள் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கௌரவ பள்ளம் பூங்கா அருகே வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டர் கோவிந்த் நல்ல முறையில் பழகி வந்துள்ளார். வீட்டில் மூதாட்டி லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த கோவிந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து உதவிகளை செய்வது போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டுக்கு வந்த கேபிள் ஆபரேட்டர் கோவிந்த், சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தபோது பின்புறமாகச் சென்று கையில் இருந்த துண்டால் கழுத்தை நெருக்கியுள்ளார். மூதாட்டி கத்திக் கூச்சலிட முயன்றும் விடாமல் நெருக்கமாகக் கழுத்தை நெருக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்தார். ஆனால் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்த கோவிந்த், அவரிடம் இருந்த பத்து சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

Advertisment

மயக்கம் தெளிந்த மூதாட்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கேபிள் ஆபரேட்டர் மூதாட்டியின் கழுத்தை நெரிக்கும் அந்த பரபரப்பு காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அதை ஆதாரமாக வைத்துகேபிள் ஆபரேட்டர் கோவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.