உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றதையடுத்து, அவரது இல்லத்தில் ஆட்டம், பாட்டம் அரங்கேறியது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கம் வென்றார். இதையடுத்து, நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரான பானிபட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தொலைக்காட்சியில் போட்டியைக் கண்ட பெண்கள் ஆடி, பாடி வெற்றியைக் கொண்டாடினர். அப்போது, மூதாட்டியின் உற்சாக நடனம் அனைவரையும் கவர்ந்தது. இது குறித்த காணொளி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.