Skip to main content

"மத்திய அரசிடம் கிடைக்கக் கூடிய நிதியை பெறக்கூட என்.ஆர்.காங்கிரஸ் அரசு தயாராக இல்லை"-வைத்திலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு! 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022


 

"The NR Congress government is not even ready to get the funds available to the central government" -Waithilingam MP accused!

 

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து ஓராண்டுக்கு பிறகு புதுச்சேரி அரசு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. நான் கேட்டுக் கொண்ட பிறகே  இந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர். பாராளுமன்றத்திலேயே ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக எம்.பி.க்களையும் அழைத்தே கூட்டம் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

 

ஆனால், புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில் 2 எம்.பி.க்களையும்  அழைக்கவில்லை. புதுச்சேரியில் ஸ்மார்ட் திட்டத்தை எங்கே அமல்படுத்துவது? என்பதில் குழப்பம் ஏற்படுத்தியதே தற்போதைய முதலமைச்சர்தான். காங்கிரஸ் அரசு அமைந்த பிறகுதான் தெளிவான முடிவெடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பெற்றோம்.

 

இந்த அரசு அமைந்து ஓராண்டாகியும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நிதி ஒதுக்கவில்லை. ரூபாய் 160 கோடியிலும் ரூபாய் 41 கோடிக்கு மட்டுமே வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தில் பணியாற்ற அதிகாரிகள் இல்லாததும் ஒரு குறையாகும். பிரதமரின் கிராமப்புற இணைப்பு சாலை திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தருகிறது. இதில் புதுச்சேரியில் 50 கி.மீக்கு சாலை பணிகள் நடைபெற வேண்டும். இதில் கால்வாசி பணிகள் கூட நடக்கவில்லை. காரைக்காலில் இத்திட்டத்தையே தொடங்கவில்லை.

 

நிதியில்லை என  முதலமைச்சர் தெரிவிக்கிறார். மத்திய அரசிடம் கிடைக்கக் கூடிய நிதியை பெறக்கூட இந்த அரசு தயாராக இல்லை. இனி கடந்த கால அரசைக் குறைசொல்வதை நிறுத்திவிட்டு, உங்கள் அரசு என்ன செய்யப்போகிறது? என கவனம் செலுத்துங்கள்.

 

செயல்படாமல் உள்ள அரசை செயல்படுத்துங்கள். எங்கள் ஆட்சியில் தற்போதுள்ள உள்துறை மந்திரிதான் பவர்புல்லாக இருந்தார். அவரிடம்தான் அனைத்து துறையும்  இருந்தது. எனவே கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தாதது யார்? என மக்களுக்கு தெரியும்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தீவிரமான மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Tamilisai Selandararajan's explanation of his resignation

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநர் பதவியில் அதிகமாக முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வந்தால், நான் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இணைந்து 25 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள். புதுச்சேரியை வேறு மாநிலம் என்று எப்போதும் பார்த்ததில்லை. தன்னை வேறு மாநிலத்தவர் என்று யாரும் பார்க்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி அல்லது புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத் தான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் நான் நன்றியுடையவளாக இருப்பேன். மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொண்ட பிறகு என்னுடைய எதிர்கால திட்டத்தை பற்றிச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்கள் சேவைக்காக மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கானா மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் எப்போதும் தெலுங்கானாவின் சகோதரி. அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.

Next Story

சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தற்கொலை முயற்சி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Arrested old man attempted to incident

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

Arrested old man attempted to incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் புதுச்சேரி அரசு, ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. கருணாஸும், விவேகானந்தனும் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள விவேகானந்தன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குளிக்க பயன்படுத்தும் சோப்பைச் சாப்பிட்டும், துணியால் முகத்தை இறுக்கியும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.