Skip to main content

பிரியங்கா காந்தி விவகாரம்... மன்னிப்பு கேட்ட காவல்துறை...

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

noida police apologize for mishandling priyanka gandhi

 

 

பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து ஆண் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்திய செயலுக்கு நொய்டா காவல்துறை மன்னிப்பு  கோரியுள்ளது. 

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத் தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்தது. இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று  முன்தினம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல நேரில் சென்றனர்.

 

அப்போது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து அவரை தடுத்து நிறுத்தினார். காவலரின் இந்த செயல்பாடு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்காக நொய்டா காவல்துறை மன்னிப்பு  கோரியுள்ளது. இது குறித்து நொய்டா மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “பெண்களின் பாதுகாப்பு, கண்ணியத்தை உறுதி செய்வதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். நடந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் இணைந்த பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Supporter of Priyanka Gandhi who joined BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய ஆதரவாளர் தஜிந்தர் சிங் பிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே இவர் பாஜவில் இணைந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வந்த தஜிந்தர் சிங் நேற்று (20.04.2024) தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தவுத்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தது குறித்து தஜிந்தர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கடந்த 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன். யாருக்கு எதிராகவும் நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

“பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்” - பிரியங்கா காந்தி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"BJP won't win more than 180 seats" - Priyanka Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரோட்ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களைத் தூவி பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பிரியங்கா காந்தி பேசுகையில், “பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

இது குறித்து ஏன் பேசவில்லை என ஊடகங்கள் அவரிடம் கேட்க வேண்டும். அவரது கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றினால் இட ஒதுக்கீடு மற்றும் மக்களின் உரிமைகள் என்னவாகும்?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கவில்லை என்றால் பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.