nit

மகாராஷ்டிராவில் விவசாய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட நிதின் கட்கரி தேசிய கீதத்திற்கு எழுந்து நின்ற பொழுது மேடையிலேயே மயங்கி விழுந்தார். அவருடன் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் அவரை தாங்கி பிடித்து, பின்னர் முதலுதவி செய்துமருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில் கூறியுள்ள நிதின் கட்கரி, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டது. தற்பொழுது நலமுடன் உள்ளேன் என கூறியுள்ளார்.

Advertisment