Skip to main content

புதுவையில் சிக்கிய நைஜிரியா நாட்டினர்! போதை பொருள் விற்பனையில் மூவர் கைது! 

Published on 18/05/2022 | Edited on 18/05/2022

 

Nigerians trapped in pondicherry

 

புதுச்சேரியில் முதன் முறையாக 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 கிராம் கொகைன் உள்ளிட்ட போதை பொருட்களை வைத்திருந்த நைஜிரியா பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புதுச்சேரி காவல்துறையினர் 'ஆப்ரேஷன் விடியல்' என்கிற பேரில் கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி குருசுகுப்பம் கடற்கரை பகுதியில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருள் வைத்திருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைடுத்து அப்பகுதிக்கு சென்ற தனிப்படை மற்றும் முத்தியால்பேட்டை போலிசார் அங்கு சந்தேகிக்கும் வகையில் இருந்த பெண் உட்பட மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

 

அதில் அவர்கள் நைஜிரியா நாட்டை சேர்ந்த ஜஸ்டின் டெல்வின் (29), டேவிட் மைக்கல் எலியா (26), பிரான்சிஸ் லக்கி ஒட்டேரி (22) என்றும், இவர்கள் படிப்பதற்காக அந்நாட்டில் இருந்து விசா எடுத்து வந்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தங்கி தடைசெய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ எனப்படும் மெத்லின் டையாக்சி மாத்திரைகள் மற்றும் கொகைன் பவுடர் ஆகியவற்றை டெல்லியில் இருந்து வர வைத்து புதுச்சேரியில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.


அதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 32 கிராம் எடை கொண்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாத்திரைகள் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலிசார் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 


மேலும் டெல்லியில் இருந்து இவர்களுக்கு யார் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தார்கள் என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், புதுச்சேரியில் இந்த எம்.எம்.டி.ஏ மாத்திரை மற்றும் கொகைன் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை எனவும் போதை தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் வம்சி ரெட்டி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்