Skip to main content

முப்படை குழுவின் புதிய தலைவர் பதவியேற்பு!

Published on 30/05/2019 | Edited on 30/05/2019

இந்திய கடற்படையின் தளபதியாக இருந்த சுனில் லம்பா, முப்படை குழுவின் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இவர் மே 31 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் முப்படை குழுவின் புதிய தலைவராக பி.எஸ்.தனோவா பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் நேற்று நடைப்பெற்ற நிகழ்ச்சியின் போது  சுனில் லம்பாவிடமிருந்து தனோவா புதிய பொறுப்பை பெற்றுக்கொண்டார். இந்தியாவில் உள்ள ராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட முப்படைகளின் மூத்த உறுப்பினரே, முப்படைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம். அதன் படி தனோவா குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என ராணுவ படையின் செய்து தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பு

 

IAF

 

 

தியதாக பொறுப்பேற்றுள்ள பி.எஸ்.தனோவா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவர். அவர் செய்த சாதனை பற்றி பார்க்கலாம். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்து 1978 ஆம் ஆண்டு விமானப்படை பிரிவில் பணியில் சேர்ந்தார்.இவர் மூன்றாயிரம் மணி நேரத்திற்கும் அதிகமாக போர் விமானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது கமாண்டிங் அதிகாரியாக பணிப்புரிந்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்