Skip to main content

“முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை” - மத்திய அரசிடம் அனுமதி கோரிய கேரள அரசு!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
New dam near Mullaiperiaru dam Kerala govt has sought permission from the central govt

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை சுமார் 128 ஆண்டுகள் பழமையானது ஆகும். முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு கேரள அரசு முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே 336 மீட்டரில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இத்தகைய நிலையில் மீண்டும் புதிய தடுப்பணை கட்ட கேரள அரசு முடிவு செய்தது.

அதற்காக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. அதில், “தற்போதுள்ள அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய அணை கட்டிய பின்னர் தமிழகத்திற்கு தற்போது வழங்குவதைவிட அதிக தண்ணீரை வழங்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விண்ணப்பம் தொடர்பாக வரும் 28 ஆம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய அணை வண்டிப்பெரியாரிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் முல்லைப் பெரியாரில் புதிய அணை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்