netflix

Advertisment

அமெரிக்க ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ், இந்தியாவில் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமாகிவருகிறது. குறிப்பாக அந்த தளத்தில் வெளியாகும் வெப்-சீரிஸ்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

இந்நிலையில், அதிக ரசிகர்களைக் கவர நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், தனது கட்டணதிட்டங்களை அதிரடியாக குறைத்துள்ளது. மொபைல் மூலமாக மட்டும் நெட்ஃப்ளிக்ஸைஅணுக முன்பு மாதம் 199 ரூபாய் செலுத்த வேண்டுமென்றநிலையில், அந்தக் கட்டணம் தற்போது 149 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏதாவது ஒரு சாதனத்தில் நெட்ஃப்ளிக்ஸைஅணுக மாத கட்டணம் 499 ஆக இருந்தநிலையில், தற்போது அந்தக் கட்டணம் 199 ரூபாயாககுறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் நெட்ஃப்ளிக்ஸைஅணுகுவதற்கான கட்டணம் மாதம் 649 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தக் குறைக்கப்பட்ட கட்டணங்கள் இன்றுமுதல் (14.12.2021) அமலுக்கு வருவதாகவும் நெட்ஃப்ளிக்ஸ் கூறியுள்ளது.