Skip to main content

சாதனை பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கினார் குடியரசுத்தலைவர்!

Published on 08/03/2020 | Edited on 08/03/2020

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். 

'Nari Shakti Puruskar' AWARDS PRESIDENT IN DELHI

அதன்படி பாகீரதி அம்மா (105), கார்த்தியாயினி (98) உள்ளிட்ட 15 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கினார். 105 வயதான பாகீரதி அம்மா 4- ஆம் வகுப்புக்கு இணையான தேர்வில் சமீபத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். கேரளாவின் கார்த்தியாயினி அம்மா எழுத்தறிவு தேர்வில் 98% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, கஜேந்திரசிங் செகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரை

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

President's speech at the joint sitting of Parliament!

2022-2023 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று (31/01/2022) காலை 11.00 மணிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

 

நாடாளுமன்ற மையமண்டபத்தில் நடைபெற்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது, "இந்தியா தனது 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடி வருகிறது. நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் வணக்கங்கள். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு சிறப்பாக செயல்பட்டன. மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

President's speech at the joint sitting of Parliament!

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகின் முன்னோடி நாடாக இந்தியா திகழ்கிறது. கரோனா தடுப்பூசி நம் நாட்டிலேயே தயாரித்ததால் நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தேவையான வளர்ச்சியை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த காலங்களைவிட தற்போது இந்தியாவில் சுகாதார கட்டமைப்பு பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது" எனத் தெரிவித்தார். 

 

நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. 

 

இன்றைய நிகழ்வில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்! (படங்கள்)

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

நாட்டின் 73வது குடியரசுத் தினத்தையொட்டி, டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

அதைத் தொடர்ந்து, குடியரசுத் தின அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் வரை நடந்தது. முப்படை அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். 

 

கரோனா பரவலால், வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பது ரத்து செய்யப்பட்டது. அதேபோல், குடியரசுத் தின விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் 24,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விழாவில் விமானப் படையைச் சேர்ந்த 75 போர் விமானங்களும் சாகசங்களை நிகழ்த்தினர். 

 

சென்னை ஆவடியில் தயாரான அர்ஜுன் ரக பீரங்கியும், டெல்லி குடியரசுத் தின அணி வகுப்பில் கலந்து கொண்டது. அதேபோல், 1965, 1971 போரில் பயன்படுத்திய பீரங்கிகள், தற்போதைய நவீன ஆயுதங்கள் அணி வகுப்பில் கலந்து கொண்டனர். 

 

டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், மேகாலயா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட், அருணாச்சலப்பிரதேசம், கர்நாடகா, ஜம்மு- காஷ்மீர், சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணி வகுப்பில் பங்கேற்றன. அத்துடன், மத்திய அரசுத் துறைகளின் ஊர்திகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 

 

சிறப்பாகப் பணியாற்றிய வீரர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். ஸ்ரீ நகரில் 3 பயங்கரவாதிகளைக் கொன்று வீரமரணம் அடைந்த ஏ.எஸ்.ஐ. பாபு ராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் இருந்து ஏ.எஸ்.ஐ. பாபு ராம் மனைவி ரினா ராணி, மகன் மாணிக் விருதைப் பெற்றுக் கொண்டனர்.