Skip to main content

பாஜக-தேசியவாத காங். கூட்டணிக்கு பிரதமர் வாழ்த்து!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 

devendra fadnavis

 

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தனது கருத்து என்ன என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

இன்று இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது திடீரென மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சராகவும் மற்றும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்ற இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் அதில், மஹாராஷ்டிராவில் நல்ல எதிர்காலத்திற்காக இந்த கூட்டணி வேலை செய்யும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித்பவாருக்கு கட்சியை வழங்கிய தேர்தல் ஆணையம்; “சரத்பவார் ஒரு பீனிக்ஸ் பறவை” - ஜிதேந்திர அவாத்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Jitendra Awad says Sharadpawar is a phoenix for The Election Commission gave the party to Ajit Pawar

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஷிண்டே பாஜக கூட்டணியில் சேர்ந்த பின் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று பாஜக கூட்டணியில் சேர்ந்த அஜித் பவாருக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சரத்பவார் அணி தங்கள் கட்சிக்கு புதிய பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு கட்சியின் நிறுவனர் சரத் பவார் அணிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சரத் பவார் அணியின் தலைவர் ஜிதேந்திர அவாத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம். சரத் பவார் ஒரு பீனிக்ஸ் பறவை. அவர் சாம்பலில் இருந்து எழுவார். இது நடக்கப் போகிறது. இது எங்களுக்கு முன்பே தெரியும். இன்று அஜித் பவார், சரத் பவாரை அரசியல் ரீதியாக தாக்கியுள்ளார். இதற்கு பின்னால் அஜித் பவார் மட்டுமே இருக்கிறார். இதனால் வெட்கப்படுவது தேர்தல் ஆணையம் தான்” என்று கூறினார். 

Next Story

அஜித் பவாருக்கு தான் 'பவர்' - தேர்தல் ஆணையம் முடிவு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Power belongs to Ajith Pawar; Election Commission decision

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஷிண்டே பாஜக கூட்டணியில் சேர்ந்த பின் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று பாஜக கூட்டணியில் சேர்ந்த அஜித் பவாருக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சரத்பவார் அணி தங்கள் கட்சிக்கு புதிய பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.