நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி நாடு முழுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் தொடங்கி அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, முந்தைய அரசுகள் பாதுகாப்பு துறை ஒப்பந்தங்களில் ஊழலில் ஈடுபட்டன. ஆனால் இப்போது அப்படி இல்லை. தனி மனிதனாக நானும், ஒரு கட்சியாக பாஜக வும் மிகுந்த பலமானதாக மாறியுள்ளோம். கடந்த 2014ம் ஆண்டை விட இந்த தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும். வரும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியே இல்லை. 300 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும்" என கூறினார்.