Skip to main content

"உடனடியாக உத்தரவை திரும்பப்பெறு" - வங்கியின் சுற்றறிக்கைக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

su venkatesan

 

இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியின் பொதுமேலாளர் நவராத்திரியை ஒட்டி ஆடை தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளார். அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பொது மேலாளர்அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஊழியர்கள் நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது வண்ண ஆடைகளை அணிந்து பணியாற்றும் இடத்திற்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 7ஆம் தேதியான வியாழனன்று மஞ்சள் வண்ண உடை அணிந்து வர வேண்டும் எனவும், அதற்கடுத்த நாள் பச்சை வண்ண உடை அணிந்து வர வேண்டும் எனவும், அடுத்தடுத்த நாட்களில் வரிசையாக க்ரே, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, ராயல் ப்ளூ, பிங்க், ஊதா ஆகிய வண்ண உடைகளை அணிந்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

bank circular

 

மேலும் இந்த விதிமுறை கடைப்பிடிக்காவிட்டால் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனும் இந்த சுற்றறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்? யார் இவருக்கு அதிகாரம் தந்தது! அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல். உடனடியாக உத்தரவை திரும்பப்பெறு" என பதிவிட்டுள்ளார்.

 

 

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (நவீன மயம்) ஏ.ஆர். ராகவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை 01.10.2021 அன்று வெளியிட்டுள்ளார். நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் உடை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும்... யார் இவருக்கு அதிகாரம் தந்தது! ஊழியர் விதிமுறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?

 

நவராத்திரியை நம்பிக்கையுள்ளவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்களின் விருப்பம், தனிப்பட்ட உரிமை. ஆனால் எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டுமென்று என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல்; அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்துமீறல்.

 

நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும்! சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்! சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!”
இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

"மீண்டும் வெற்றி பெற்ற தோழர்” - சசிகுமார் வாழ்த்து 

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
sasikumar wishes su venkatesan mp

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்த வாக்குப் பதிவுகளின் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிந்தது. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பா.ஜ.க, தனித்து 240 இடங்களையும் காங்கிரஸ் 99 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. அதனடிப்படையில் அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.க., கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியை அமைக்க உள்ளது. இதனையொட்டி நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றுள்ளனர். மேலும் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்திலும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை. இதையொட்டி வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசனுக்கு இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சசிகுமார் வெளியிட்ட எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற தோழர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்” என்றார். மேலும் சு.வெங்கடேசனுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சு.வெங்கடேசன் மொத்தம் 4,30,323 வாக்குகள் பெற்றிருந்தார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை விட 2,09,409 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இரண்டாவது முறையாக மதுரை தொகுதியில் பெற்றுள்ளார். முன்னதாக 2019ஆம் ஆண்டு அதே தொகுதியில் 4,47,075 வாக்குகள் பெற்று எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட 1,34,119 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வெற்றியை உறுதி செய்த வேட்பாளர்கள்!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Candidates who have ensured success

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 5 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. 

Candidates who have ensured success

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அணைத்து இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில், திமுக கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது. 

Candidates who have ensured success

அந்த வகையில் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா வெற்றி சான்றிதழை வழங்கினார். அதோடு வெற்றி பெற்ற சு.வெங்கடேசனுக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் தோல்வி அடைந்துள்ளார்.

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்துள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி தோல்வி அடைந்துள்ளார். கடலூர் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர் பச்சான் படுதோல்வி அடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.