Mother who lost her son and daughter and lost her lives in karnataka

கர்நாடகா மாநிலம், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி அருகே மிட்டேகேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணில் உடல் மிதந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பாகேபள்ளி போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர்.

Advertisment

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அதன் பின்னர் அவர்கள், தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். அதன் பிறகு, அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தவர்கள் யாகவகோட்டை பகுதியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவரின் மனைவி ராதா, அவர்களின் 4 வயது மகள் பூர்விதா மற்றும் 2 வயது மகன் என்பது தெரியவந்தது. மேலும், ராதா தனது மகன் மற்றும் மகளை ஏரியில் வீசி கொன்றுவிட்டு அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதற்கிடையில், ராதா என்ன காரணத்திற்காக மகன், மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பாகேபள்ளி போலீசார், ராதாவின் கணவர் மல்லிகார்ஜுனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment