Skip to main content

குழந்தைக்கு பெயர் வைப்பதில் தாய்க்கும் தந்தைக்கும் பிரச்சனை; நீதிமன்றம் கொடுத்த டுவிஸ்ட்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Mother and father have problem in naming the child; The twist given by the court

 

குழந்தைக்கு பெயர் வைப்பதில் தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்ற நிலையில் நீதிமன்றம் யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு ஒன்றை கொடுத்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

கேரளாவில் ஒரு தம்பதியினர் பிறந்த குழந்தைக்கு 'புன்யா நாயர் 'என பெயர் வைக்க வேண்டும் என குழந்தையின் தாயும், 'பத்மா நாயர்' என பெயர் வைக்க வேண்டும் என குழந்தையின் தந்தையும் முடிவு செய்தனர். இதனால் பெயர் வைப்பதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய் தந்தைக்கு இடையேயான தகராறை தீர்ப்பதற்கு காலதாமதம் ஆகும். இந்த காலதாமதத்தால் பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாத நிலை ஏற்பட்டு விடும். இது குழந்தையின் நலனை பாதிக்கும் என கருத்து தெரிவித்து, தாய் தந்தையாகி இருவரின் கருத்தையும் எடுத்துக் கொள்ளாமல் புன்யா பால கங்காதர் நாயர் என நீதிமன்றமே பெயர் சூட்டியது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் வெறிச்செயல்; காதலியைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த காதலன் 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

boyfriend who incident his girlfriend and made a whatsapp status

 

காதலியைக் கொன்று தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த காதலனின் செயல் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பவுசியா(20) என்ற நர்சிங் மாணவி சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். அதே கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக்(20) என்பவரும், பவுசியாவும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், மாணவி பவுசியா கடந்த மூன்று நாட்களாகக் கல்லூரிக்குச் செல்லாமல் காதலன் ஆஷிக்குடன் வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹோட்டல் அறையில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த சண்டை முற்றவே ஆத்திரமடைந்த காதலன் ஆஷிக், பவுசியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அதனை ஆஷிக் தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார். இந்த நிலையில் ஆஷிக்கின் ஸ்டேட்டஸை பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழி உடனடியாக குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹோட்டல் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்த பவுசியாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் தப்பிக்க முயன்ற காதலன் ஆஷிக்கையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பேருந்தில் குழந்தைக்கு பால் புகட்டிய பெண்ணிடம் சீண்டல் - காவலருக்கு தர்ம அடி

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Police slapped; at woman who fed baby milk on bus

 

பேருந்தில் குழந்தைக்கு பால் புகட்டியபடி சென்ற பெண்ணிடம் காவலர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு தர்ம அடி வாங்கிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

இடுக்கி மாவட்டம் பெருவந்தனம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஜாஸ் மோன். கடந்த சனிக்கிழமை கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து முண்டகாயம் செல்லும் பேருந்து ஒன்றில் காவலர் அஜாஸ் மோன் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் முன் இருக்கையில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார். அப்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். பேருந்து பொன்குன்னம் என்ற  நிறுத்தத்தில் நின்றதும் அந்த பெண் குழந்தையுடன் இறங்கிக் கொண்டார். அங்கிருந்து வேறு பேருந்தில் பெண் ஏறினார். ஆனாலும் விடாத அந்த காவலர் அந்த பெண் ஏறிய மாற்று பேருந்திலும் ஏறியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன அப்பெண் உடனடியாக கணவர் மற்றும் அவரது உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். உடனடியாக கஞ்சிரப்பள்ளி என்ற பகுதியில் பெண்ணின் உறவினர்கள் பேருந்தை மறித்தனர். அவரிடம்  பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் அஜால் மோனுக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்