Skip to main content

இதுதான் மோடி எல்லையைக் காக்கும் லட்சணம்!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018
border


பாஜகவையோ, மோடியையோ எதிர்த்து பேசிவிட்டால் போதும், நாம் தேச விரோதி ஆகிவிடுவோம். அதாவது பாஜகவின் காவிப் பட்டாளம் அல்லது மோடியின் பக்தர்கள் நம்மை ஆண்டி இண்டியன் என்று முத்திரை குத்திவிடுவார்கள்.
 

மோடி அரசின் எந்த ஒரு தோல்வியையோ, அவருடைய அறிவிப்பால் மக்கள் படும் அவதியையோ சுட்டிக் காட்டினால் போதும், எல்லையில் வீரர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விடவா நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்பார்கள்.


ஆனால், ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதி முழுமையாக ராணுவத்தினரின் நலனுக்காக செலவிடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை சமீபத்தில் ராணுவவீரர்களே முன்வைத்தார்கள். தங்களுக்கு நவீன உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என்றும் ராணுவ அதிகாரிகளே கூறினார்கள்.
 

இந்நிலையில்தான் மோடி அரசு எல்லைப் பகுதியை பாதுகாக்கும் இன்னொரு லட்சணமும் அம்பலமாகி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இருக்கின்றன. இந்த எல்லை நெடுகிலும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேலிகளையே சிதைத்து தீவிரவாதிகள் அடிக்கடி ஊடுருவுகிறார்கள்.
 

அவர்களுடைய ஊடுருவலை தடுக்க தீவிரமாக ரோந்துப்பணியில் வீரர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால், இரவு நேர ரோந்துப் பணிக்கு வீரர்களுக்கு உதவ, வேலி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குஜராத்தின் பூஜ் மற்றும் காந்திநகர் சர்வதேச எல்லைப் பகுதியில் 2 ஆயிரத்து 61 எல்லை வேலி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 616 விளக்குகள் மட்டுமே எரிவதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.
 

எல்லை வேலி விளக்குகளை சரியாக பராமரிக்கக்கூட மோடி அரசாங்கத்தால் முடியாத போது, இரவு நேரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை ராணுவ வீரர்கள் எப்படித் தடுக்க முடியும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்