சீனாவுடனான பதட்டமான சூழலுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று லடாக் பகுதியில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியா, சீனா இடையே பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் சீனா இப்பகுதியில் ஆயுத பலத்தை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பதிலடி தரும் வகையில் ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று திடீர் பயணமாக லடாக் சென்ற பிரதமர் மோடி அப்பகுதியில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ராணுவபாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றை ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்த அவர், பின்னர் நிமு பகுதியில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் மோடியுடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தும் உடன் இருந்தார்.