Skip to main content

"போராடுவது என்றால் அவர்களுக்கு எதிராக போராடுங்கள்"... பிரதமர் மோடி காட்டம்....

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை 107-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கர்நாடகாவுக்கு வருகை தந்துள்ளார்.

 

modi speech in karnataka

 

 

மதியம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆளுநர் உள்பட பலர் வரவேற்றனர். பின்னர் துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு சென்று பிரதமர் மோடி வழிபட்டார். அதன்பின்னர் பேசிய மோடி, "இந்த புனிதமான நிலத்திலிருந்து 2020 ஆம் ஆண்டைத் தொடங்குகிறேன் என்பது எனது அதிர்ஷ்டம். ஸ்ரீ சித்தகங்க மடத்தின் புனிதம் நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை வளமாக்க விரும்புகிறேன். பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடு. மத சிறுபான்மையினர் அங்கு துன்புறுத்தப்படுகிறார்கள்.

துன்புறுத்தப்பட்டவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை, அந்நாட்டிலிருந்து வந்த அகதிகளுக்கு எதிராக பேசுகிறார்கள். நீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால்  பாகிஸ்தானில் உள்ள  சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்புங்கள். நீங்கள் போராட்டம்  நடத்த வேண்டுமானால், கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்களுக்கு எதிராக குரல் எழுப்புங்கள்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.