மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

modi

Advertisment

Advertisment

பல பிரபலங்களும், இந்திய அரசியல் தலைவர்களும் வெற்றிபெற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக அரசியல் தலைவர்கள் பலரும் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு, நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்டோர் வாழ்த்து.