Misbehaviours in ICU at rajasthan

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில்24 வயதுள்ள இளம்பெண் ஒருவர், நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் சிராக் யாதவ் என்ற நபர் மருத்துவ உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண்ணை, சிராக் யாதவ் இன்று (27-02-24) அதிகாலை அங்கு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கூச்சலிட முயன்றுள்ளார். அப்போது, அவருக்கு சிராக் யாதவ் மயக்க ஊசியை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனையடுத்துமயக்கம் தெளிந்த பிறகு அந்த இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாகபெண்ணின் குடும்பத்தார் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மருத்துவ உதவியாளர் சிராக் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைக்காக ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.