Skip to main content

மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; உ.பி. அரசு விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம்  உத்தரவு!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Minority student case UP Supreme Court orders government to explain

 

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாஃபர் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர், தனது வகுப்பில் பயிலும் குழந்தைகளில் ஒரு இஸ்லாமிய மாணவரை அடிக்கும்படி, சக மாணவர்களுக்குச் சொல்லும்படியான வீடியோ அண்மையில் வெளியாகி இருந்தது. அதுமட்டுமின்றி அந்த ஆசிரியர், சிறுவனுடைய இஸ்லாமிய மதத்தைக் குறிப்பிட்டு, “முகமதிய குழந்தைகள்” எனவும் “இந்த இஸ்லாம் குழந்தைகள் அனைவரும் எந்தப் பகுதிக்காவது செல்லுங்கள்” என்று இழிவாகப் பேசியிருந்தார்.

 

மேலும் அந்த வீடியோவில், அந்த இஸ்லாமிய மாணவனை அறைந்துவிட்டு உட்கார்ந்த இன்னொரு மாணவனை பார்த்து ஆசிரியை திரிப்தா தியாகி, “ஏன் இவ்வளவு லேசாக அடிக்கிற? அவனை கடுமையாக அடி” என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

அதே சமயம் அந்த பள்ளி ஆசிரியை திரிப்தா தியாகி  ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டு இருந்தார். அதில் மாணவர்கள் தங்கள் வகுப்பு இஸ்லாம் மாணவனை அறையச் சொன்னதன் பின்னணியில் தனக்கு எந்தவித வகுப்புவாத நோக்கமும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க 25 ஆம் தேதிக்குள் உத்திர பிரதேச அரசு விளக்கமளிக்க ஆனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய முசாஃபர் நகர் போலீஸ் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“அரசியலமைப்பு மீதான தாக்குதல்” - கன்வார் யாத்திரை உத்தரவுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Priyanka Gandhi Condemns Kanwar Yatra Order!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். அதன்படி, கன்வார் யாத்திரை வரும் ஜூலை 22ஆம் தேதி தொடங்க உள்ளது. 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்று ஹரித்வார் காவல்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த யாத்திரையை மேற்கொள்பவர்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

உ.பி அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சாதி, மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரான குற்றமாகும். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்று, பிறப்பித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. உத்தரபிரதேசத்தில் வண்டிகள், கடைகளின் உரிமையாளர்களின் பெயர் பலகைகளை வைக்க வேண்டும் என்ற பிரித்தாளும் உத்தரவு நமது அரசியலமைப்பு, நமது ஜனநாயகம் மற்றும் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தின் மீதான தாக்குதலாகும்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

ஹத்ராஸ் உயிரிழப்பு சம்பவம்; சாமியாரின் சர்ச்சை பேச்சு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
The preacher's controversial speech at Hathras Casualty Incident

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 2ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றியப் பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சாமியார் போலே பாபா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் என்ற இடத்தில் சாமியார் போலே பாபா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஜூலை 2 ஆம் தேதி நடந்த சம்பவத்திலிருந்து தான் மன அழுத்தத்தில் இருக்கிறேன். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். ஆனால், உலகுக்கு வந்த ஒவ்வொருவரும் ஒரு நாள் போக வேண்டும். விதியில் எழுதப்பட்டதை யாராலும் தடுக்க முடியாது.

அதே நேரம், சம்பவம் நடந்த போது கூட்டத்தில் சில விஷமிகள் புகுந்து விஷவாயுவை பரப்பியதை நேரில் சிலர் பார்த்திருக்கிறார்கள். சனாதன மற்றும் சத்தியத்தின் அடிப்படையில் இயங்கும் எனது அமைப்பை சிலர் அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். நீதித்துறை ஆணையத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எங்களது அனைத்து ஆதரவாளர்களும் முடிந்த அனைத்தையும் செய்து சதிகாரர்களை அம்பலப்படுத்துவார்கள் என்று முழு நம்பிக்கை வைத்துள்ளோம்” என்று கூறினார். இந்த வழக்கில், சாமியார் போலே பாபா பெயர் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.