பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மகேந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சுவாரசியமான வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரல் ஆனதுடன் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. மேலும் காண்போரின் கண்களை குளமாக்கு வகையிலும் அந்த வீடியோ இருக்கிறது.

Advertisment

அந்த வீடியோவில் இனிப்பு கடையின் முன் உட்கார்ந்திருக்கும் நபர் ஒருவர் வீடியோ கால்மூலம் எதிர்புறம் நபரிடம் பேசுகிறார். வாய் பேச முடியாத அவர் தான் நினைப்பதை சைகை மூலம் வெளிப்படுத்துகிறார். இந்த வீடியோ புதிய உந்துதலை தருவதாக இளைஞர்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.