Manchireddy Kishan Reddy issue

வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட சென்ற ஆளும்கட்சி எம்.எல்.ஏ. மீது காலணிவீசப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் ஆளும்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம்பட்டணம் எம்.எல்.ஏ மஞ்சிரெட்டி கிஷன்ரெட்டி பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்றார். அப்போது, அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ. தங்கள் பகுதிக்குள் நுழைவதை எதிர்த்தும், அங்கு அமையவுள்ள மருந்துத் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்துமாறு கோஷமெழுப்பினர். அப்போது எம்.எல்.ஏ மீது செருப்பு வீசப்பட்டதோடு, அவரது வாகனமும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த போலீஸார் மக்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர்.

Advertisment