Published on 17/10/2022 | Edited on 17/10/2022

ஓடும் ரயிலில் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்ட நிலையில், நபர் ஒருவர் தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. வாக்குவாதத்தில் இளைஞரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்ட அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.