MANOJ TIWARI

மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையோட்டிவார்த்தை போர், சிபிஐ விசாரணை, குண்டுவீச்சு சம்பவம்எனஅம்மாநிலஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில் ‘மண்ணின்மகள்’ கோஷத்தோடு, தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ள மம்தாபானர்ஜியின் தலைமையில் இன்று (24.02.2021) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசியமம்தாபானர்ஜி, "மோடி மேற்கு வங்கத்தைஆளமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வங்கமேவங்கத்தைஆளும். குஜராத் வங்கத்தை ஆளாது. மோடி வங்கத்தை ஆள மாட்டார். 'குண்டாஸ்' (குற்றவாளிகள்) வங்காளத்தை ஆள மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்தியகிரிக்கெட்வீரர் மனோஜ்திவாரி, மம்தாதலைமையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டுப் பிரபலங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில்இந்தியப் பிரபலங்கள் ட்வீட்செய்தபோது, இந்தியப் பிரபலங்களை விமர்சிக்கும்வகையில்மனோஜ்திவாரிட்விட்டரில் கருத்துக்களைப் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.