Male-turned-female IRS officer in hyderabad

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அனுசுயா (35) என்ற பெண். இவர் மத்திய சுங்க கலால் மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக (ஐ.ஆர்.எஸ்) பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டில் சென்னையில் உதவி ஆணையராகத்தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2018இல் துணை ஆணையர் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற இவர், கடந்த ஜனவரி 2023 முதல், தெலங்கானாவின் ஹைதராபாத்தில் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

Advertisment

பெண் ஐ.ஆர்.எஸ் அதிகாரியான இவர், பெண்ணிலிருந்து ஆணாக மாற வேண்டும் என்றும், அதனால் அரசாங்க ஆவணங்களில் தனது பெயரை மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்தார். மேலும், தனது பெயரை ‘எம்.அனுகதிர் சூர்யா’ என்று மாற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், அவரது வேண்டுகோளைப்பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது எம்.அனுசுயா என்பதற்குப்பதிலாக இனிமேல் எம்.அனுகதிர் சூர்யா என்று குறிப்பிடுவார் என்றும், அவர் ஆணாக கருதப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணி வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.