பரக

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின்மனைவி அம்ருதா பட்னாவிஸ். அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இவர் பல்வேறு விழாக்களில் அதிகம் கலந்துகொள்வார். சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் போர்க்கப்பலை பார்வையிடச் சென்றபோது கப்பலின் ஓரத்தில் பாதுகாப்பு எதுவுமின்றி புகைப்படம் எடுத்த சம்பவத்தின் மூலம் இவர் இந்தியப் பிரபலம் ஆனார். அப்போது அவரின் கணவரும் பாஜக மூத்த தலைவருமான பட்னாவிஸ் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.

Advertisment

இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அவர் துணை முதல்வராக இருந்து வருகிறார். எப்போதும் கணவருடன் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அம்ருதா பட்னாவிஸ் மோடி மீது அதிக மரியாதை வைத்திருப்பவர். பல்வேறு சந்தர்ப்பங்களில் அதை அவர் வெளிப்படுத்தியும் இருக்கிறார். இந்நிலையில், மோடி தொடர்பாகப் பேசிய அவர், “இந்தியாவுக்கு மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை என்றால், புதிய இந்தியாவுக்குப் பிரதமர் மோடி தந்தை;இந்தியாவுக்கு இரண்டு தேசத் தந்தை” என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment